/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
இதய நோய்க்கு நவீன சிகிச்சைகள்: நாளை உலக இதய தினம்
/
இதய நோய்க்கு நவீன சிகிச்சைகள்: நாளை உலக இதய தினம்
PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

உலக இதய சுகாதாரக் கூட்டமைப்பினால், செப்டம்பர் 29ம் நாள் உலக இதய நாளாக கொண்டாடப்படுகிறது. இதய நோய், குறிப்பாக மாரடைப்பு நோயினால் ஏற்படும். திடீர் மரணத்தையும் மற்ற இதய நோய்களை கட்டுப்படுத்தவும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுத்து, இதய ஆரோக்கியத்தினால் மனித குலத்தை காப்பாற்றுவது நோக்கம். வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு, புகையிலை, மது அருந்துவதைத் தவிர்ப்பது ஆகியவை இன்றியமையாதவை.
கடந்த ஆண்டு பாரிசில், உலக இதய கூட்டமைப்பு மாநட்டில் 200க்கும் மேலான இதய நோய் சங்கங்களின் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகளையும் பரிசோதனைகள் பற்றி ஆய்வுகள் பற்றிய கருத்தாய்வு நடந்தது.
இன்றைய இதய நோய் மருந்துகள் டபாக்லிப்ளோசின், எம்பாக்லிப்ளோசின் என்ற மறுந்துகள், ஆரம்ப கட்டத்தில் நீரழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இன்று இதய இயக்கத்திற்கு காரணமான பம்பிங் முன்னேற்றத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இதனால் தேவையில்லாமல் ஐ.சி.யூ.,வில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தடுக்கப்பட்டு, இதனால் இதய நோயளிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்புகளை தவிர்க்க முடிகிறது.
இதய செயலிழப்பைத் தடுக்க, ஏ.ஆர்.என்.ஐ., எனப்படும், 'ஆர்னி' ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க 'இன்க்ளிசிரான்' என்ற மருந்து கிடைக்கிறது. வருடத்திற்கு இரண்டு முறை ஊசி மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஸ்டேடின் என்ற கொலஸ்ட்ராலை குறைக்கும் மருந்தினால், சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பக்க விளைவுகள் ஏற்படும் போது பெம்பெடோயிக் அமிலம் என்ற வாய்வழி மாற்று மருந்தாக கொடுக்கப்படுகிறது.
நின்ற இதயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க, 'ஷாக்' கொடுக்கப்படுகிறது.
இதய ஊடுருவல் சிகிச்சை முறைகள் டிரான்ஸ்கேத்தர், அயோடிக் வால்வு மாற்றுமுறை:
இப்போது மகா தமனி வால்வு சுருக்க நோயளிகளுக்கு மட்டுமல்ல, மற்ற இதய வால்வுகளான, ட்ரைகஸ்பிட் மற்றும் மிட்ரல் சுருக்கம் உள்ள நோயாளிகளுக்கும் பயன்படுகிறது.
மிட்ரல் வால்வு கசிவுக்கு - மிட்ரா வால்வு கிளிப் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டிராஸ்கேத்தர் வால்வு சிகிச்சை முறைகள் இதயத்தில் இருக்கின்ற வால்வுகளான ஈறிதழ் வால்வு என்ற மிட்ரா வால்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மூவிதழ் என்ற ட்ரைகஸ்பிட் வால்வும் ஒரு பிரத்தியேக முறையில் புதுப்பிக்கப்படுகிறது.
இதய ஊடுருவல் சிகிச்சையில், வெறும் கரோநரி ரத்த குழாய் அடைப்பை நீக்க, 'ஸ்டென்ட்' பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
எந்த இதய சிகிச்சைக்கும் ஊடுருவல் பரிசோதனை முறை மிகச் சிறந்தது. பிரச்னையைத் துல்லியமாக கண்டறிந்து, சிகிச்சை செய்யலாம்.
வளர்ந்து வரும் மற்ற இதய சிகிச்சைகள் மரபணு கண்டறிதல்: ஸ்டெம் செல் சிகிச்சை இஸ்கிமிக் கார்டியோமயோபதி என்ற இதய வீக்கம், மருந்தினால் குணமாகாத நிலையில், ரிப்ராக்டரி ஆஞ்சைனாவிற்கான நீண்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில், எம்.ஆர்.என்.ஏ., என்ற மரபணு சிகிச்சைகள், ஆய்வில் உள்ளன.
'ேஹால்டர் மானிட்டரிங்':
உடலில் பெல்ட் போன்ற கருவிகள் அணிந்து, அதன் மூலம் கீழ்கண்ட வியாதிகளை கண்டறியலாம். இதயத் துடிப்பு கண்காணிப்பு, ரத்த அழுத்தம், ஆழ்ந்த துாக்கத்தில் மூச்சுத் திணறல் கண்டறிதல், எதிர்வரும் தனிப்பட்ட ஆபத்துகள் ஆகியவற்றைக் கண்டறியலாம்.
மறு வாழ்க்கை முறை: தற்போதைய மருத்துவத் துறை முன்னேற்றத்தில், பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் அதன் பிறகான வாழ்க்கை முறையை துல்லியமாக பின்பற்ற, ஏராளமான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அனைத்துமே, வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்றும் வழிமுறைகள்.
எனவே, ரத்த பரிசோதனை உட்பட, உடல் நலத்திற்குத் தேவையான அனைத்து பரிசோதனைகளையும், சீரான இடைவெளியில் மேற்கொண்டால், இதய பிரச்னைகளிலிருந்து முற்றிலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ், எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக், ராயபேட்டை