sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/மேற்படிப்பு படிக்க பணம் இனி தடையல்ல!

மேற்படிப்பு படிக்க பணம் இனி தடையல்ல!

மேற்படிப்பு படிக்க பணம் இனி தடையல்ல!


PUBLISHED ON : மே 08, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2026 06:00 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் வசிக்கும் பல திறமையான மாணவர்களுக்குப் பிளஸ் 2-விற்குப் பிறகு உயர்கல்வி என்பது பணப்பிரச்னை காரணமாக எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

வறுமையின் காரணமாகக் கனவுகள் கருகிவிடக் கூடாது என்ற உன்னத நோக்கில், கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தமில்லாமல் ஒரு கல்விப் புரட்சியைச் செய்து வருகிறது 'ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு'

தொழில்முனைவர் செல்வகுமார் தலைமையிலான இந்த அமைப்பு, இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துக் கொண்டிருக்கிறது.Image 1574235வெறும் நிதி உதவி மட்டுமல்லாமல், ஒரு மாணவரைத் தத்தெடுத்து அவர் படிப்பு முடித்து வேலைக்குச் செல்லும் வரை ஒரு தாயாக, தந்தையாக நின்று இந்த அமைப்பு வழிநடத்துகிறது.

இதுவரை 1,160-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆனந்தம் அறக்கட்டளையின் உதவியால் 45 மாணவர்கள் இன்று மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.பொறியாளர்கள்: 444 மாணவர்கள் பல்வேறு பொறியியல் துறைகளில் சாதித்துவருகின்றனர்.கலை மற்றும் அறிவியல் பிரிவில் 512-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாகியுள்ளனர்.மேலும் சட்டம், நர்சிங், சிஏ மற்றும் ஐஏஎஸ் போன்ற துறைகளில் 159 மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.

ஆனந்தம் அமைப்பில் பயின்ற மாணவர்கள் இன்று மைக்ரோசாப்ட் , இன்ஃபோசிஸ் , டி.சி.எஸ் , அக்சென்சர் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளர்களாகவும், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளாகவும் உயர்ந்துள்ளனர்.

வறுமையில் வாடிய பல குடும்பங்களை இன்று கௌரவமான நிலைக்கு இந்த அமைப்பு உயர்த்தியுள்ளது.தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள்.தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்குக் கூடுதல் முன்னுரிமை.முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உயர்கல்வி கற்கப் பொருளாதாரத் தடையால் தவிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவ நினைப்போர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:தொலைபேசி: 95519 39551 / 70109 87336இணையதளம்: www.anandham.org

கல்வி ஒன்றே ஒரு தலைமுறையின் வறுமையை ஒழிக்க வல்லது. உங்கள் பகுதியில் படிக்க வசதியற்ற மாணவர்கள் இருந்தால், இந்தச் செய்தியை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே நீங்கள் அந்த மாணவருக்குச் செய்யும் மிகப் பெரிய உதவியாகும். ஒரு பகிர்வு, ஒரு மாணவரின் எதிர்காலத்தையே மாற்றக்கூடும்!

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us