PUBLISHED ON : மே 14, 2026 07:13 PM

மலைகளின் அரசியான ஊட்டியில், இதமான குளிரும் இதம் தரும் தென்றலும் வீசும் கோடை காலத்தை முன்னிட்டு, கோடை விழாவின் முதல் பெரும் நிகழ்வான 21-வது ரோஜா மலர் கண்காட்சி இன்று ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மிகப்பொலிவுடன் தொடங்கியது.




நேற்று தொடங்கிய இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் குவிந்தனர். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, இந்த மலர் வனத்தின் அழகை அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த ரோஜா கண்காட்சி வரும் மே 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊட்டியில் வீசும் மெல்லிய பனியோடு, ரோஜாக்களின் வாசத்தை அனுபவிக்க இதுவே மிகச்சிறந்த தருணம்!
படங்கள்:ஒய்.ஜெ.ரகு,ஊட்டி.
