/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
முகத்தில் கரும்புள்ளி தழும்பா...
/
முகத்தில் கரும்புள்ளி தழும்பா...
ADDED : செப் 14, 2025 01:45 AM

கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையங்கள், முகப்பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க கன்சீலர் உதவும்.
முகத்தின் சுருக்கங்கள், தழும்புகளைக்கூட மறைத்து, சருமத்திற்கு சீரான நிறத்தை கொடுக்கும். பச்சை குத்திய டாட்டூவைக்கூட கன்சீலர் மறைத்துவிடும் என்கிறார், அழகு கலை நிபுணர் ரம்யா.
''உங்கள் சரும நிறத்தை விட, ஒன்று அல்லது இரண்டு ஷேட் குறைவான நிறமுள்ள கன்சீலரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. கருவளையங்களை மறைக்க, ஆரஞ்சு அல்லது பிங்க் நிறம் கலந்த கன்சீலரை பயன்படுத்தலாம். முதலில் உங்கள் முகத்தில் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது முக்கியம். பின்னர், கருவளையங்கள், பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் கன்சீலரை சிறிய புள்ளிகளாக வையுங்கள்,''
''கன்சீலரை நேரடியாக விரல்களால் அல்லது பிரஷ் கொண்டு மெதுவாகத் தட்டி தடவலாம். ஆனால், தேய்க்கக் கூடாது. கன்சீலரை மிகக் குறைவாக பயன்படுத்துவதே சிறந்தது. அதிகமாகப் பயன்படுத்தினால், உங்கள் முகம் செயற்கையாக தெரிய வாய்ப்புள்ளது,'' என்றார் ரம்யா.
போனஸ்
'டிப்ஸ்'
லிப்ஸ்டிக்
நீண்ட நேரம்
இருக்க, அதை கன்சீலருடன் கலந்து உபயோகிக்கலாம்.