உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், 19 வயதுக்கு உட்பட்ட இளம் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் அசத்திய இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன் விளாசினார். இடம்: ஹராரே, ஜிம்பாப்வே.
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அது சரி எம்ஜிஆர் சிலை எங்கே என்கிறீர்களா? இப்ப அவரா முக்கியம்?
திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கி சிக்கிய எஸ்.ஐ., கலையரசனை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்தும் போது தடயங்களை எஸ்.ஐ., அழிக்க முயன்றதை தடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,காயமடைந்தார்.