வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு
ADDED : செப் 03, 2025 07:19 AM

வாஷிங்டன்: வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
சமீபத்தில், மதுரோவை கைது செய்வதற்கான சன்மானத்தை டொனால்டு டிரம்ப் அரசு இரட்டிப்பாக்கி 415 கோடி ரூபாயாக அறிவித்தது. இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச நீர்வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார்.