இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது: அடித்து சொல்கிறார் ஜெலன்ஸ்கி
இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது: அடித்து சொல்கிறார் ஜெலன்ஸ்கி
ADDED : செப் 24, 2025 01:18 PM

கீவ்: இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
''கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்றவை கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இந்தியா மற்றும் சீனா நிதியளிக்கின்றனர்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இது குறித்து பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி: இந்தியா எப்போதும் உக்ரைனின் பக்கம் இருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சீனா விரும்புவதாக நான் நினைக்கவில்லை. அதேநேரத்தில், அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அணுகுமுறையை மாற்ற முடியும் என்று நாங்கள் நினைக்கிறேன்.
ஐரோப்பியர்கள் இந்தியர்களுடன் நெருக்கமாக இருந்து வருகின்றனர். ரஷ்ய எரிசக்தித்துறை குறித்த தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ளும் என்பது எனக்கு தெரியும். சீனாவிடம் இருந்து இதே போன்ற நிலைப்பாட்டை எதிர்ப்பார்க்க முடியாது. சீனாவை பொறுத்தவரை இது மிகவும் கடினம். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.