விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? பசுமை தீர்ப்பாயம் கேள்வி
ADDED : செப் 03, 2025 12:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு விசாரணையின் போது தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதாவது:
* விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்?
* பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டது.
* கட்டணங்கள் வசூலித்தால் அந்த நிதியைக்கொண்டு, சிலை கரைப்புக்கு பிறகு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம்.
* ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.