ADDED : செப் 03, 2025 12:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; புதுச்சேரியில் கூட்டணி ஒன்றில் தவெக இணைந்துள்ளதாக வெளியான தகவல் தவறு அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கை;
மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முற்றிலும் தவறானது. கூட்டணி தொடர்பாக தவெக புதுச்சேரியில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தலைவர் முடிவே இறுதியானது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.