sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

/

மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

36


ADDED : செப் 14, 2025 02:22 PM

Google News

36

ADDED : செப் 14, 2025 02:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,2 லட்சத்து 32 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2,053 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: மக்களிடம் திமுக அரசுக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வரும் வழியெல்லாம் மக்கள் திரண்டு வரவேற்பு அளித்ததால் கிருஷ்ணகிரிக்கு வர தாமதமானது. தமிழகத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் ஓடிப்போக காரணமாக இருந்தவர் இபிஎஸ்.,

பட்டியலிட முடியுமா?

அவர் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்த்ததாகச் சொல்லும் முதலீடுகளில் அதில் பாதி கூட வரவில்லை; அவரது வெளிநாட்டுப் பயணங்களில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கால்வாசி கூட வரவில்லை. ஆனால், நாம் ஒப்பந்தம் போட்டதில் 77% நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை பழனிசாமி பட்டியலிட முடியுமா? தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன்.

பொய் சொன்னாலும்…!

எதிர்க்கட்சிகளால் ஆக்கப்பூர்வமான எந்த குற்றச்சாட்டையும் திமுக அரசு மீது வைக்க முடியவில்லை. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்றே எதிர்க்கட்சிகளை பார்த்து சொல்கிறேன். உண்மைக்கே வலிமை அதிகம்.

கொள்கையற்ற கூட்டத்திற்கு பொய்களை பரப்புவதை தவிர அதை தாண்டி ஒன்னும் தெரியாது. மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற சொல்லாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.

சாதனைகள்

திமுக அரசின் செயல்பாடுகளை வட இந்திய ஊடகங்களே பாராட்டுகின்றன. திமுக அரசு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என ஊடகங்கள் சொல்கின்றன. திமுக அரசின் சாதனைகள் சிலருக்கு தெரியவில்லை. இங்குள்ள சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர். நல்லது எதையும் பார்க்க மாட்டேன் என்பது போல் பழனிசாமி பேசுகிறார்.

பொய்களை வைத்து கருத்துகளை உருவாக்க பழனிசாமி பார்க்கிறார். நீட் போன்ற வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற முடியாவிட்டாலும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.


404 வாக்குறுதிகள்

அதிமுகவை போல் நீட் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடவில்லை. நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை. மத்தியில் ஒருநாள் தமிழகத்துக்கான நீதியை தரும் ஆட்சி அமையத்தான் போகிறது. நிச்சயம் ஒரு நாள் மக்களை மதிக்கும் ஆட்சி அமையும். நாட்டு மக்களுக்கு எதிரான மத்திய பாஜ அரசின் மைனராட்டி ஆட்சி நெடுநாள் நீடிக்காது.

அப்போது நமது கோரிக்கை நிறைவேறும். திமுக.,வின் 500 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராக உள்ளனர். திராவிட மாடலின் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

5 புதிய அறிவிப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 5 புதிய அறிவிப்புகள் விபரம் பின்வருமாறு:
* அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
* கெலமங்கத்தில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
* ஒசூரில் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
* ரூ.12 கோடியில் புதிய சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
* ஓசூர் மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.








      Dinamalar
      Follow us