தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!
தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!
ADDED : செப் 24, 2025 11:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
* தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் ரிலையன்ஸ் குழுமம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
* 60 ஏக்கரில் அமையும் இந்த தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன.
* அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.