பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது; 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது; 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
UPDATED : மே 08, 2026 11:17 AM
ADDED : மே 08, 2026 09:31 AM

நமது நிருபர்
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது; 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில், தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிட்டது.
தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை: 8.27 லட்சம் பேர்; மொத்தம் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவிகளே அதிகம்.
மாணவிகளே அதிகம்
மொத்தம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி: 95.20 சதவீதம்
மாணவர்கள் 93.19 சதவீதம் பேர் தேர்ச்சி, மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
'டாப் 5' மாவட்டங்கள்
1. ஈரோடு- 98.87 சதவீதம்
2.சிவகங்கை-98.05 சதவீதம்
3.கன்னியாகுமரி- 97.63 சதவீதம்
4.திருநெல்வேலி-97.84 சதவீதம்
5.திருச்சி-97.50 சதவீதம்
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்
2,639 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 489 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
* அரசுப் பள்ளிகள்- 92.16%
* அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 96.14%
* தனியார் பள்ளிகள்-98.72%
* இருபாலர் பள்ளிகள்-95.30%
* பெண்கள் பள்ளிகள்- 97.08%
* ஆண்கள் பள்ளிகள்-90.49%
100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்!
* தமிழ்- 83 பேர்
* ஆங்கிலம்- 21 பேர்
* இயற்பியல்- 105 பேர்
* வேதியியல்- 632 பேர்
* கணிதம்- 732 பேர்
* உயிரியல்- 784 பேர்
* விலங்கியல்- 18 பேர்
* தாவரவியல்- 31 பேர்
* கணினி அறிவியல்- 6,945 பேர்
* வணிகவியல்- 683 பேர்
* கணக்குப் பதிவியல்- 1946 பேர்
* பொருளியல்-440 பேர்
ஆண்டு வாரியாக தேர்ச்சி விவரம்
கடந்த 5 ஆண்டுகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:
* 2026- 95.20 சதவீதம்
* 2025-95.03 சதவீதம்
* 2024- 94.56 சதவீதம்
* 2023- 94.03 சதவீதம்
* 2022- 93.76 சதவீதம்
திருப்பூர் 11வது இடம்
சிவகங்கை மாவட்டம் 98.05% பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்து சாதனை; கடந்த ஆண்டில் 6ம் இடத்தில் இருந்து தற்போது 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு மூன்றாமிடம் பெற்ற திருப்பூர், இந்தாண்டு 8 இடங்கள் பின்தங்கி, 97.03 சதவீத தேர்ச்சி பெற்று 11வது இடம் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 95.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 31 இடத்தில் இருந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் 21ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
துணைத் தேர்வுகள்
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13ம் தேதி முதல் வழங்கப்படும். 12ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெறாத மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது.
பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட்டது. 'www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in' ஆகிய இணையதளங்களில், மாணவர்களின் பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்.
வாட்ஸாப்பில், 78452 52525 என்ற எண்ணிற்கு 'Hi' என செய்தி அனுப்பி, துறையின் பெயர் என வந்ததும், 'Directorate of Government Examinations' பிளஸ் 2 என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின், மாணவரின் தேர்வெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால், ரிசல்ட் அறிந்து கொள்ள முடியும். மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, ஆலோசனை மையங்களில், '14417, 104, 14416' என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; மாணவர்கள் உற்சாகம்
