உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 17, 2026 06:33 AM

அ நிறம் | அளவு
சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று முன்தினம் மட்டும், 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதுடன், அதில் மூன்று வயது குழந்தை அநியாயமாக உயிரிழந்துள்ளது.
முதல்வரே, உங்கள் ஆட்சியில் சராசரியாக, 2 மணி நேரத்திற்கு, ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.
தினசரி பல சினிமா பிரபலங்களை சந்திக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை, இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்; முதல்வரான பின்னும், நடிகர் மனநிலையிலேயே தொடரும் உங்கள் பந்தாவிற்கு, எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், எதற்கு பலியாக வேண்டும். உங்களை நம்பி ஓட்டளித்த பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்.
- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,
