ADDED : செப் 20, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், எல்லோருக்கும் கருத்து சொ ல்வதற்கு உரிமை உண்டு; தி.மு.க.,வில் யாருமே கருத்து சொல்ல முடியாது. தி.மு.க., நடத்திய முப்பெரும் விழாவில், ஒரு பதற்றம் தெரிகிறது.
மத்திய அரசு கொடுமைப் படுத்துவது போலவும், தமிழக உரிமைகளை, வாங்க போராடிக் கொண்டிருப்பது போலவும், மாயத் தோற்றத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.
ஆனால், தமிழக மக்களின் உரிமைகள், கிராமத்து மக்களின் உரிமைகளை, தி.மு.க., பறித்து வருகிறது. இவர்கள் மாநில உரிமையை பற்றி பேசுகின்றனர்.
பா.ஜ.,வை உள்ளே விடமாட்டோம் என ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் சொல்கிறோம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, தி.மு.க., ஆட்சியை, 202 6ல் தொடர விட மாட்டோம்.
- தமிழிசை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,