தங்கம் விலை சற்று குறைவு: இன்று ஒரு கிராம் ரூ.10,220, ஒரு சவரன் ரூ.81,760
தங்கம் விலை சற்று குறைவு: இன்று ஒரு கிராம் ரூ.10,220, ஒரு சவரன் ரூ.81,760
ADDED : செப் 13, 2025 10:01 AM

சென்னை: சென்னையில் இன்று (செப் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை ஆகிறது.
உலகின் பல நாடுகள், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 11), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,150 ரூபாய்க்கும், சவரன், 81,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று (செப் 12) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,240 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 81,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில் இன்று (செப் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.