நேபாளத்தின் அமைதி, செழிப்புக்கு இந்தியா உதவும்: இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு
நேபாளத்தின் அமைதி, செழிப்புக்கு இந்தியா உதவும்: இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு
ADDED : செப் 13, 2025 10:20 AM

புதுடில்லி: நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,''நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.