ADDED : செப் 26, 2025 06:42 PM

மதுரை மீனாட்சியம்மன் இன்று ரசவாதம் செய்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.பாண்டிய நாட்டிலுள்ள திருப்பூவனம் என்னும் சிவத்தலத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்தாள். சிவபக்தையான அவள் பூவனநாதருக்கு தங்கச்சிலை அமைக்க விரும்பினாள். இதை நிறைவேற்ற எண்ணி, திருநீறு பூசிய மேனியுடன் சித்தர் கோலத்தில் சிவனே நேரில் வந்தார். அவளது வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை எல்லாம் தீயில் இட்டால் பொன்னாக மாறும் என்றும் வாக்களித்து மறைந்தார். அதன்படி அவை பொன்னாக மாறியது.
அவளும் அதில் சுவாமி சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் மயங்கி அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள். அவளது நகக்குறியை திருப்புவனத்தில் உற்ஸவர் சிலையில் இன்றும் காணலாம். இந்த கோலத்தை தரிசித்தால் செல்வம் பெருகும். நினைத்தது நிறைவேறும்.
பாட வேண்டிய பாடல்
ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே .