இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன்: முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன்: முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ADDED : செப் 03, 2025 07:45 AM

லண்டன்; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் முன்னிலையில், மொத்தம் 26 ஒப்பந்தங்களின் வழியே, ரூ.7020 கோடி முதலீடு கிடைத்துள்ளது.
தற்போது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திரண்டிருந்த பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொடுத்து வரவேற்பு அளித்தனர். செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
இங்கிலாந்தில் கால் பதித்துவிட்டேன்.தொலைதூரங்களை கடந்து உற்சாகத்துடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.