/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கருத்து கேட்பு கூட்டத்தில் மைக்கை பறித்த பெண் எஸ்.ஐ.,
/
கருத்து கேட்பு கூட்டத்தில் மைக்கை பறித்த பெண் எஸ்.ஐ.,
கருத்து கேட்பு கூட்டத்தில் மைக்கை பறித்த பெண் எஸ்.ஐ.,
கருத்து கேட்பு கூட்டத்தில் மைக்கை பறித்த பெண் எஸ்.ஐ.,
ADDED : செப் 03, 2025 11:28 PM

திருநெல்வேலி:புதிய கல் குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், சமூக ஆர்வலரை பேசவிடாமல் பெண் எஸ்.ஐ., மைக்கை பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே இருக்கந்துறையில், 12 ஏக்கரில் புதிய கல் குவாரி அமைக்க, தனியார் நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாட்டில், ராதாபுரம் தனியார் மண்டபத்தில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
சேரன்மகாதேவி சப் - கலெக்டர் ஆயுஷ் குப்தா தலைமை வகித்தார்.அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது, சமூக ஆர்வலர் முகிலன், ' 'திருநெல்வேலி மாவட்டத்தில் , ராதாபுரம் வட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் கல் குவாரிகள் அமைகின்றன.
''நீர்நிலைகள், மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் அமைவதற்கு அனுமதி வழங்க கூடாது,'' என, தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசி கொண்டிருக்கையில், மைக்கை பெண் எஸ்.ஐ., ஷாலு திடீரென பறித்தார். இதனால், முகிலன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், கருத்து கேட்பு கூட்டத்தில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.