/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
முதியவர்களை வெட்டிய சிறுவர்கள் கைது
/
முதியவர்களை வெட்டிய சிறுவர்கள் கைது
ADDED : செப் 03, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:சேரன்மகாதேவியைச் சேர்ந்த சிறுவர்கள் கோட்டைவிளைதெரு பகுதியில் டூவீலர்களில் வேகமாக சென்றனர். இதனை அந்த பகுதி முதியவர்கள் கண்டித்தனர்.
நேற்றிரவு அங்கு சென்ற அந்த சிறுவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் 58, சரவணன் 60, ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் தந்தை சரவணன் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற அவரது 16 வயது மகனும் அரிவாளால் வெட்டப்பட்டார். மற்றொரு சிறுவனுக்கும் அரிவாளால் வெட்டு விழுந்தது. இதில் ஈடுபட்டதாக மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.