/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இளமனுார் இருதரப்பு பிரச்னையைபேசி தீர்க்க மக்கள் வலியுறுத்தல்

/

இளமனுார் இருதரப்பு பிரச்னையைபேசி தீர்க்க மக்கள் வலியுறுத்தல்

இளமனுார் இருதரப்பு பிரச்னையைபேசி தீர்க்க மக்கள் வலியுறுத்தல்

இளமனுார் இருதரப்பு பிரச்னையைபேசி தீர்க்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 06, 2025 02:35 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இளமனுாரில் இருதரப்பினர் தகராறில் பதியப்பட்ட பி.சி.ஆர்., வழக்கை ரத்து செய்து ஊரில் அமைதி பேச்சு நடத்த அப்பகுதி கிராம மக்கள் அகமுடையார் புலிப்படை அமைப்பினர் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் அகமுடையார் புலிப்படை அமைப்பினர், இளமனுாரை சேர்ந்த நுாறுக்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். இளமனுாரில் இருதரப்பினர் மோதலில் மாற்றுதிறனாளி பாபுவை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். பி.சி.ஆர்., வழக்கை ரத்து செய்ய வேண்டும். அரசுக்கும், போலீசாருக்கும் தவறான தகவல் தருபவர் மீது நடவடிக்கை வேண்டும். இளமனுாரில் 24 மணி நேரமும் போலீசார் குவிக்கப்பட்டு கிராம வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இருதரப்பு பெரியோர்களிடம் பேச்சு நடத்தி மக்கள் அமைதியாக வாழ வழிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எஸ்.பி., அலுவலகம் வந்தனர். அப்போது இப்பிரச்னையில் கைதாகியுள்ள காளீஸ்வரன் மனைவி ஜெயா தனது கணவர் தவறு செய்யவில்லை. அவர் சிறையில் உள்ளதால் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாமல் சிரமப்படுகிறேன். கணவரை விடுதலை செய்ய வேண்டும் என அழுது மயங்கினார். அவருக்கு தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தினர்.