ADDED : ஜூன் 25, 2025 08:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 'டைனி ஹேண்ட்ஸ் பிக் லேர்னிங்' எனும் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி பொருட்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
இந்த அமைப்பின் சார்பில் அலங்காநல்லுார் வட்டாரம் ஏ.கோவில்பட்டியில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு, பரிசோதனை முகாம் நடந்தது. டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். மருத்துவ ஆய்வாளர் டாக்டர் ஹமீதா பேசுகையில், ''ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிந்தால் தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்'' என்றார். பொறுப்பாளர் மனோ நன்றி கூறினார்.