/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 27, 2025 05:34 AM

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் வந்தது. சோதனைக்குப் பின் புரளி என உறுதியானது.
இதனால் நேற்று மதியம் 12:20 மணிவரை அலுவலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமசாமி, எஸ்.ஐ.,ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. புரளி என உறுதியானது.
போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தார்.
வழக்கமாக காலை 10:30 மணிக்கு விசாரணை துவங்கும். மதியம் 1:00 மணிக்கு தாமதமாக விசாரணை துவங்கியது.
உயர்நீதிமன்றக் கிளை எம்.எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சரவணக்குமார் கூறியதாவது:
உயர்நீதிமன்றக் கிளையில் 2016 முதல் சி.ஐ.எஸ்.எப்., போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தீ தடுப்பு உள்ளிட்ட அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், அலுவலர்களுக்கு ஒத்திகை நடத்த வேண்டியது சி.ஐ.எஸ்.எப்., போலீசாரின் கடமை.
ஆனால் இதுவரை அவசரகால ஒத்திகை நடத்தப்படவில்லை. நடத்த வேண்டும் என்றார்.