/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்

/

அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : மே 19, 2025 06:26 AM

Google News

ADDED : மே 19, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி நைனார்பாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் அழகுவேல் பாபு, பிரபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், நகர செயலாளர் ராகேஷ் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பிற அணி செயலாளர்கள் தங்க பாண்டியன், ராஜிகாந்தி, ஜான்பாஷா, பேரவை நிர்வாகிகள் குமார், அய்யம்பெருமாள், பிரபு, ராமு, ராமதாஸ், வேணுகோபால், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரவை இணைச் செயலாளர் அருள் நன்றி கூறினார்.