/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எப்போது விடிவு பிறக்குமோ: பணிச்சுமையால் சத்துணவு பணியாளர்கள்: காலி இடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பு

ADDED : அக் 18, 2025 04:19 AM

சத்துணவு மையங்களில் உணவு சாப்பிடும் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவருக்கு தினமும் 100 கிராம் அரிசி, 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் சமையல் எண்ணெய், ஒரு முட்டை என கணக்கிட்டு உணவு வழங்கல் துறை மூலம் வழங்கப்படுகிறது. எரிபொருள் செலவிற்கு 125 காசு, மளிகை பொருட்களுக்கு 46 காசு, காய்கறி செலவினத்திற்கு 5ம் வகுப்பு வரை மாணவருக்கு 133 காசு, 6ம் வகுப்புக்கு மேல் 165 காசுகள் என பணமாக அமைப்பாளரிடம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மையத்திற்கும் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இருந்தனர். ஆனால் தற்போது பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட காலி இடங்களை நிரப்பாமல் உள்ளனர். இதனால் மாவட்ட அளவில் 25 முதல் 40 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன.
பல மையங்களில் ஒரு சமையலர் மட்டுமே அதிகாரப்பூர்வ ஊழியராக பணியில் இருக்கும் நிலை உள்ளது. ஒரு அமைப்பாளர் ஒன்று முதல் 4 மையங்கள் வரையிலும் பொறுப்பாளராக பணியாற்றும் நிலை உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மாணவர் வருகை பதிவை பொறுத்தே செலவினம், பொருட்களின் அளவு இருக்கும் என்பதால் இதற்கான கணக்குகளை பராமரிப்பது சத்துணவு அமைப்பாளரின் முக்கிய பணி.
ஒரு அமைப்பாளர் பல மையங்களுக்கு செல்வதாலும் சில மையங்கள் அதிக துார இடைவெளியில் இருப்பதாலும் கூடுதல் போக்குவரத்து செலவு, உடல் சோர்வு ஏற்படுவதால் கடும் மன உளைச்சலில் உள்ளனர். அமைப்பாளர் கூடுதலாக 5 மையங்களை கவனித்தாலும் ஒரு மையத்திற்கான பொறுப்பு படி மட்டுமே வழங்கப்படுகிறது. சத்துணவு மையங்களில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.