/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை
/
திண்டுக்கல்லில் விட்டு விட்டு பெய்த மழை
ADDED : அக் 18, 2025 04:18 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்கிறது.மாவட்டத்தை பொறுத்தவரையில் 10 நாட்களாக காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு மேல் தொடங்கி இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது.
அணைகள், ஆறுகள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8:00 மணிக்கு மேல் லேசான துாரலுடன் மழை பெய்ய சீரான இடைவெளியில் விட்டு விட்டு இரவு வரை மழை நீடித்தது.பெருமழை இல்லாத காரணத்தால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
* நத்தம் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பாப்பாபட்டியை சேர்ந்த பஞ்சு 54, குடிசை வீடு நேற்று இரவு பெய்த மழையில் சேதமடைய உள்பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாகின. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பண்ணுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் விசாரணை நடத்தினார்.