/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புரியும்படி பேசுபவரே அறிவாளி குடிமைப்பணி பயிற்சி மைய முதல்வர் பேச்சு

ADDED : செப் 04, 2025 04:42 AM

திண்டுக்கல்: ''மக்களுக்கு எளிதாக புரியும்படி பேசுபவரே அறிவாளிகளாக இருக்கமுடியும்'' என அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மைய முதல்வர் சங்கர சரவணன் பேசினார்.
திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வரும் புத்தக திருவிழா சிந்தனையரங்கத்தில் அவர்பேசியதாவது:
அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல. அது பெருமையின் அடையாளம். மக்களுக்கு எளிதாக புரியும்படி பேசுபவரே அறிவாளிகளாக இருக்கமுடியும். நல்லவை பக்கம் மனம் செலுத்துவதும், நல்லதை செய்வதும்தான் அறிவு. பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை, நுால்களை படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
உலக விஷயங்களை படிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். நடிகர் கவிதா பாரதி பேசுகையில் ,'' கலையும், இலக்கியமும், எழுத்தும் தான் மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது''என்றார். கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் இலக்கியக்களம் கூடுதல் பொருளாளர் சிவபாலன், பொறியாளர் திருப்பதி, பாண்டி மணிகண்டன் கலந்து கொண்டனர்.