/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகன முகப்பு விளக்குகளில் இல்லை கருப்பு ஸ்டிக்கர்கள்; கண்களை கூச செய்யும் வெளிச்சத்தால் அதிகரிக்கும் விபத்துகள்
/
வாகன முகப்பு விளக்குகளில் இல்லை கருப்பு ஸ்டிக்கர்கள்; கண்களை கூச செய்யும் வெளிச்சத்தால் அதிகரிக்கும் விபத்துகள்
வாகன முகப்பு விளக்குகளில் இல்லை கருப்பு ஸ்டிக்கர்கள்; கண்களை கூச செய்யும் வெளிச்சத்தால் அதிகரிக்கும் விபத்துகள்
வாகன முகப்பு விளக்குகளில் இல்லை கருப்பு ஸ்டிக்கர்கள்; கண்களை கூச செய்யும் வெளிச்சத்தால் அதிகரிக்கும் விபத்துகள்
ADDED : செப் 25, 2025 03:18 AM

நத்தம் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான டூவீலர், கார், கனரக வாகனங்கள் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் இல்லாமல் இயங்குகிறது. தற்போது சந்தைக்கு வந்துள்ள நவீன ரக எல்.இ.டி., பல்புகளை கூடுதலாக விதிகளை மீறி பொருத்துவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களை கூச செய்யும் ஒளியால் விபத்துக்கள் அதிகரிக்கிறது.
மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவோர் எதிரே வரும் வாகனங்களில் கண் கூசும் விளக்குகளின் ஒளியால் திணறுகின்றனர். சிலர் வாகனங்களை அப்படியே நிறுத்தி விடுகின்றனர். தற்போது டூவீலர் முதல் அனைத்து வாகனங்களிலும் நவீனரக பவர்புல் பல்புகளையும் எல்.இ.டி., பல்புகளையும் உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி பொருத்திக் கொள்கின்றனர்.
இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனம் டூவீலரா அல்லது நான்கு சக்கர வாகனமா என தெரியாத அளவிற்கு முகப்பு விளக்குகள் அதிக பிரகாசமாக உள்ளது. இதன் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக முகப்பு விளக்குகளில் நடுவில் கருப்பு ஸ்டிக்கர், கருப்பு பெயின்ட் அரை வட்டமாக அடிப்பது வழக்கம்.
வாகனங்களின் முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலான வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை என்பது அறவே இல்லை. வாகன ஓட்டிகளும் அதன் அவசியத்தை உணராததால் இரவுநேரங்களில் விபத்துக்கள் அதிகரிக்கிறது. பலர் இரவில் லைட்களை டிம், பிரைட் செய்வதும் கிடையாது. இது தொடர்பாக தினமும் துறையினர் நடவடிக்கை அவசியமாகிறது. மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிரம் காட்ட வேண்டும்.
* கடுமையான நடவடிக்கை தேவை
பெரும்பாலான வாகனங்களின் ஹெட்லைட்டில் கருப்பு ஸ்டிக்கர் இல்லாமல் தான் செல்கிறது. இரவு நேரங்களில் பயணிக்கும் அனைவரும் இதன் தாக்கத்தை உணர்கிறோம். எதிரில் வருவது டூவீலரா, நான்கு சக்கர வாகனமா என கண்டறிவது சிரமமாக உள்ளதுடன் ரோட்டில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் லைசென்ஸ் உள்ளதா, ஆர்.சி.புக்சரியாக உள்ளதா என்பதை மட்டுமே கவனித்து அனுப்புகின்றனர். ஆனால் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் உள்ளதா என்பதை கண்டு கொள்வதே இல்லை. இதை தவிர்க்க போக்குவரத்து துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் சமீப காலமாக அதிகரிக்கும் விபத்துக்கள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியும்.
- ஆனந்த கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர், பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு, வேம்பார்பட்டி, நத்தம்.