/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மது போதையில் வாகனம் ஓட்டுவோர்.. அதிகரிப்பு: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை
/
மது போதையில் வாகனம் ஓட்டுவோர்.. அதிகரிப்பு: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை
மது போதையில் வாகனம் ஓட்டுவோர்.. அதிகரிப்பு: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை
மது போதையில் வாகனம் ஓட்டுவோர்.. அதிகரிப்பு: அவசியமாகிறது போலீஸ் நடவடிக்கை
ADDED : செப் 04, 2025 04:41 AM

மாவட்டத்தை பொருத்தமட்டில் விவசாயம், ஆன்மிகம், சுற்றுலா, வணிகம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
நாள்தோறும் வாகன பயன்பாடு என்பது இன்றியமையாத நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிவேக வாகனங்கள் தற்போது சந்தையில் உலா வருகின்றன. அதே நேரத்தில் டிரைவர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் சரக்கு வாகனங்கள் இயக்குபவர்களில் பெரும்பகுதியினர் அனுபவப்பட்டநிலையில் கிளீனராக சென்று டிரைவராக உருமாறுகின்றனர்.
இவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத சூழலால் விபத்துக்கள் தொடர்கின்றன.மேலும் ரோட்டோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஓய்வெடுக்கும் டிரைவர்கள் மது அருந்திய நிலையில் வாகனங்களை இயக்குகின்றனர்.
இவர்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன.
பெயரளவிற்கு போலீசார் வாகன சோதனை செய்த போதும் மது போதையில் இயக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
அபராதம் மட்டுமன்றி இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மதுபோதையில் வாகன ஓட்டும் நடைமுறை கட்டுப்படுத்த ஏதுவாக அமையும்.
போக்குவரத்து விதிமுறைகளில் இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது எதிர்காலத்தில் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு கடுமையான சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுபோதையில் வாகன ஓட்டும் செயல்கள் கட்டுப்படுத்தப்படும்.