/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பெருமாள் கோயிலில் ஆவணி திருவிழா துவக்கம்
/
பழநி பெருமாள் கோயிலில் ஆவணி திருவிழா துவக்கம்
ADDED : செப் 03, 2025 01:11 AM

பாலசமுத்திரம் : பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் திருகொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடக்க கொடியேற்றம் நடந்தது.
ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.
செப்.12 வரை நடக்கும் விழாவில் செப்.8 மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், செப்.9 இரவு பாரிவேட்டை நடைபெறுகிறது.
செப். 10 காலை 7:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.