ADDED : ஜூன் 12, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
நத்தம், ஜூன் 13
-நத்தம் அருகே பூசாரிபட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் 60.
இவரது மனைவி பார்வதி 57. இவர்கள் 2 ஆண்டுகளாக சேதமடைந்த வீட்டில் வெயில், மழையால் அவதிப்பட்டு வந்தனர். இவர்களுக்கு நத்தம் , சிறுகுடி தன்னார்வலர்கள் ஒன்றிணைந்த வீடு கட்டி கொடுக்கும் பணியை 3 மாதத்திற்கு முன் துவக்கினர். ரூ.1.5 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் நேற்று காலை திறப்பு விழா நடந்தது. தன்னார்வலர்கள் அனைவரும் சேர்ந்து வீட்டை திறந்து வைத்தனர்.
