ADDED : ஜூன் 12, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூன் 13 -
மாவட்ட வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் , வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் திராட்சை விவசாயிகளுக்கான ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும், நடைமுறைகளும், மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் நடைமுறைகள் என்ற தலைப்பில் பயிற்சி, ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் வேளாண் வணிகத்துறை கூட்டரங்கில் நடந்தது. வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் உமா தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் நர்மதா வரவேற்றார். தேனி மாவட்டம் கம்பம் ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி மைய பேராசிரியர் கெகதீஸ்வரி , மேம்பாட்டு கழக வேளாண் ஆலோசகர் கோகுல்நாத் , பழநி வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி , வேளாண் உதவி இயக்குனர் சைனி பேசினர்.
