/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முட்புதர் சூழ்ந்த நீரோடை சுத்தம் செய்யப்படுமா?
/
முட்புதர் சூழ்ந்த நீரோடை சுத்தம் செய்யப்படுமா?
ADDED : செப் 26, 2025 09:18 PM

நெகமம்: நெகமம், குமாரபாளையத்தில் உள்ள நீரோடை புதர் சூழ்ந்திருப்பதால், தண்ணீர் தேக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.
நெகமம், வடசித்தூர் ஊராட்சி, குமாரபாளையம் கிராமத்தில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் நீரோடை குறுக்கிடுகிறது. இந்த ரோட்டில் தினமும் விவசாயிகள் மற்றும் மக்கள் பலர் சென்று வருகின்றனர்.
ரோட்டோரத்தில் உள்ள நீரோடையில் அதிக அளவு செடி, கொடிகள் முளைத்தும், முட்புதர் சூழ்ந்தும் காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், இந்த நீரோடைப் பகுதியில் நீர் செல்ல தடையாக இருப்பதுடன், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விளை நிலங்கள் நீரின்றி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதி வறட்சியாக இருப்பதுடன், தண்ணீர் வசதியும் குறைவாக உள்ளது.
எனவே, வேளாண் பொறியியல் துறை அல்லது ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த நீரோடையை தூய்மைப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.