/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறலாம் ! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு
/
வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறலாம் ! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு
வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறலாம் ! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு
வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறலாம் ! ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு
ADDED : செப் 26, 2025 09:20 PM

பொள்ளாச்சி:
''வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டால் தான் முன்னேற முடியும்,'' என, என்.ஜி.எம். கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் பேசினார்.
பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியில், 33வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலர் பாலசுப்ரமணியம், விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு உயர்கல்வி மாநில சபையின் துணைத்தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் பேசியதாவது:
கடவுள் நமக்காக சில பொறுப்புகளை கொடுத்து இருக்கிறார். அதை எப்போதும் சரி வர செய்ய வேண்டும். பொறுப்புகளை உணர்ந்து ஈடுபாட்டுடன், நேர்மையாக செயல்களை செய்தால் நமக்கான வாய்ப்புகள் தேடி வரும். அன்றாடம் செய்யும் பணிகளை விட அதிகமான பொறுப்புகளை தானாக ஏற்றுச் செய்தால் தான், நம் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.
பணிபுரியம் இடத்தில் நல்ல நம்பிக்கையை சம்பாதித்துக்கொள்ள வேண்டும். வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொண்டால் தான் முன்னேற முடியும். இன்று புதிதாக கற்றுக்கொள்ள எத்தனையோ வசதிகளும், வாய்ப்புகளும் உள்ளன.
அதை பயன்படுத்தி ஆங்கிலப்புலமை, பேச்சு திறன், தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
கல்லுாரி பொருளாளர் சிவகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி யோகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு துணை அதிகாரி நாகராஜன் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.