/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல் கொள்முதல் மையம் ஆனைமலையில் துவக்கம்
/
நெல் கொள்முதல் மையம் ஆனைமலையில் துவக்கம்
ADDED : செப் 26, 2025 09:39 PM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, ஆழியாறு அணை வாயிலாக, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இரு பருவங்களாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு பருவமழை கைகொடுத்ததால், இரு பருவத்திலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த நவ., மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகின்றன. அதில், பழைய ஆயக்கட்டு கால்வாய் பகுதிகளில் சாகுபடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார் தலைமை வகித்தார். நெல் தரக்கட்டுப்பாடு அலுவலர் மணிகண்டன், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. சன்னரகம் ஒரு குவிண்டாலுக்கு, (100 கிலோ) மொத்தம், 2,545 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது ரகம் ஒரு குவிண்டால், 2,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 17 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். விவசாயிகள் நெல்லை கொள்முதல் மையத்துக்கு கொண்டு வந்து பயன்பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.