/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதால் ஏற்படுகிறது 'அமீபிக்' மூளை காய்ச்சல்

ADDED : செப் 02, 2025 09:26 PM

கோவை; அமீபிக் மூளை காய்ச்சல் பாதிப்பு, சுத்தமில்லாத நீர்நிலைகளில் குளிப்பதால், மூக்கு வழியாக பரவுகிறது. கோவையில் இப்பாதிப்பு இதுவரை பதிவாகவில்லை.
கேரள மாநிலத்தில் சுகாதாரமற்ற நீர்நிலைகளில் உள்ள அமீபா வாயிலாக, அமீபிக் மூளை காய்ச்சல் ஏற்பட்டு, இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடம் காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் கோவையில் சற்று அதிகரித்து வருவதால், அது கேரளாவை போல் அமீபிக் மூளை காய்ச்சலாக இருக்குமோ என்கிற அச்சம், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தேசிய குழந்தைகள் நலக்குழும தமிழக பிரிவு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:
அமீபிக் மூளை காய்ச்சல் என்பது, சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதன் வாயிலாக ஏற்படுகிறது. கோவையில் இப்பாதிப்பு இதுவரை பதிவாகவில்லை. பெற்றோர் அச்சப்பட தேவையில்லை.சுகாதாரமற்ற நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இப்பாதிப்பு மூக்கு வழியாக மட்டுமே உடம்புக்குள் நுழைகிறது. இது, தொற்று பாதிப்பு இல்லை. சாதாரண காய்ச்சல், தொண்டை வலி, பருவ நிலை காரணமாக, குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. தண்ணீரை சுட வைத்து பருக வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுவது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.