sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : செப் 28, 2025 11:28 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இங்கிலாந்து 'சாம்பியன்'

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி 10வது சீசனுக்கான பைனலில் கனடா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 33-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (1994, 2014, 2025) சாம்பியன் பட்டம் வென்றது.

இத்தாலி கலக்கல்

பசே சிட்டி: பிலிப்பைன்சில் நடந்த உலக வாலிபால் சாம்பியன்ஷிப் பைனலில் இத்தாலி அணி 3-1 (25-21, 25-17, 17-25, 25-10) என பல்கேரியாவை வீழ்த்தி 5வது முறையாக கோப்பை வென்றது. போலந்து அணி 3-1 (25-18, 23-25, 25-22, 25-21) என செக்குடியரசை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

கோகோ காப் வெற்றி

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 4-6, 7-5 என, கனடா வீராங்கனை லெய்லா பெர்ணான்டசை வீழ்த்தினார். இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி 6-3, 6-0 என, அமெரிக்காவின் சோபியா கெனினை தோற்கடித்தார்.

ஜப்பான் அபாரம்

சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 24வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வென்றது. மற்றொரு போட்டியில் சிலி அணி 2-1 என, நியூசிலாந்தை வீழ்த்தியது.

எக்ஸ்டிராஸ்

* பீகார் கிரிக்கெட் சங்கத்தின் இளம் தலைவராக ஹர்ஷ் வர்தன் 24, தேர்வானார்.

* சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 3-0 (11-6, 11-9, 11-7) என சீனாவின் யாங் யியுனை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர் 3-0 (11-5, 11-6, 11-9) என ஆஸ்திரேலியாவின் பின் லுாவை வென்றார்.






      Dinamalar
      Follow us