sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : செப் 03, 2025 10:35 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜப்பான் கலக்கல்

பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஜப்பான், நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-2 (20-25, 25-20, 22-25, 25-22, 15-12) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் முன்னேற்றம்

கடோவிஸ்: போலந்தில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 83-76 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியது. நான்கு போட்டியில் 3 வெற்றி, ஒரு தோல்வி என 7 புள்ளிகளுடன் பிரான்ஸ் அணி 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.

செர்பியா 'ஹாட்ரிக்'

ஜிரா: மால்டாவில் நடக்கும் ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் (18 வயது) லீக் போட்டியில் செர்பிய அணி 12-9 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. முதலிரண் போட்டியில் உக்ரைன், மால்டாவை வீழ்த்திய செர்பியா, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

காலிறுதியில் சீனா

உலான்பாடர்: மங்கோலியாவில் நடக்கும் ஆசிய கோப்பை (16 வயது) கூடைப்பந்து போட்டியில் சீன அணி 97-81 என, தென் கொரியாவை வீழ்த்தியது. ஏற்கனவே மங்கோலியா, மலேசியாவை வீழ்த்திய சீனா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.

எக்ஸ்டிராஸ்

* பெங்களூருவில் இன்று துவங்கும் துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதியில் தெற்கு - வடக்கு, மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. இதில் மேற்கு மண்டலம் சார்பில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால், ஷர்துல் தாகூர் களமிறங்குகின்றனர்.

* பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான சென்னை அணியின் தலைவராக, முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் 80, மீண்டும் நியமிக்கப்பட்டார்.

* தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது உறுதியானதால், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் ('நாடா') ஒழுங்குமுறை குழு, இந்திய தடகள வீராங்கனை சம்மி காளிராமனுக்கு 22, இரண்டு ஆண்டு தடை விதித்தது.

* இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள ஐ.சி.சி., பெண்கள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணியில் இளம் 'விக்கெட் கீப்பர் பேட்டர்' கரபோ மெசோ 17, இடம் பிடித்துள்ளார். கேப்டனாக லாரா வால்வார்ட் நியமிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us