/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கபடி: புனே 'ஹாட்ரிக்' வெற்றி
/
கபடி: புனே 'ஹாட்ரிக்' வெற்றி
ADDED : செப் 03, 2025 10:29 PM

விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் புனே அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. லீக் போட்டியில் 45-36 என, பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, பெங்கால் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் புனே அணி 26-22 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய புனே வீரர்கள், பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் புனே அணி 45-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்திய புனே அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. புனே அணிக்கு அஸ்லாம் இனாம்தர் (11 புள்ளி), ஆதித்யா ஷிண்டே (11) கைகொடுத்தனர். பெங்கால் அணி சார்பில் கேப்டன் தேவங்க் 17 புள்ளி பெற்றார்.
ஹரியானா வெற்றி: மற்றொரு லீக் போட்டியில் ஹரியானா, மும்பை அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 36-36 என 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அசத்திய ஹரியானா அணி 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.