தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சிக்கலில் வினேஷ் போகத்

சிக்கலில் வினேஷ் போகத்

சிக்கலில் வினேஷ் போகத்


UPDATED : மே 28, 2026 09:44 PM

ADDED : மே 28, 2026 09:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 09:44 PM ADDED : மே 28, 2026 09:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பாரிஸ் ஒலிம்பிக் (2024) பைனலுக்கு முன்னேறிய இவர், கூடுதல் எடை காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின் ஓய்வு பெற்றார். தனது முடிவை திரும்பப் பெற்ற இவர், வரும் ஆசிய விளையாட்டில் (செப். 19-அக். 4) பங்கேற்கும் வகையில், உ.பி.,யின் கோண்டா நகரில் நடந்த சீனியர் ரேங்கிங் தொடரில், 57 கிலோ பிரிவில் களமிறங்க இருந்தார். ஆனால்,'ஓய்வில் இருந்து மீண்டும் போட்டியில் பங்கேற்க, விதிகளை சரியாக பின்பற்றவில்லை,' என தெரிவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,), வினேஷ் போகத்திற்கு வரும் ஜூன் 26 வரை தடை விதித்தது.

இம்முடிவை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் வினேஷ். இதனை விசாரித்த தலைமை நீதிபதி தேவேந்திர குமார், உபாத்யாயா, தேஜஸ் காரியா இடம் பெற்ற 'பெஞ்ச்', வினேஷ் போகத் தகுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் அரதே அடங்கிய 'பெஞ்ச்' இன்று விசாரிக்க உள்ளது.

ஆசியாவில் அசத்துமா இந்தியா

காகமிகஹாரா: ஜப்பானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. இதில் ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்திய அணி, கஜகஸ்தான் (மே 29), ஜப்பான் (மே 31), தென் கொரியா (ஜூன் 1), சீனதைபே (ஜூன் 3) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 'பி' பிரிவில் மலேசியா, வங்கதேசம், சீனா, பாக்., அணிகள் உள்ளன.

பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்திய அணி, மலேசியா (மே 30), தென் கொரியா (மே 31), சிங்கப்பூர் (ஜூன் 2) அணிகளுடன் உள்ளது. 'பி' பிரிவில் சீனா, ஜப்பான், சீனதைபே, வங்கதேச அணிகள் உள்ளன.

முன்னாள் கேப்டன்களான சர்தார் சிங், ராணி ராம்பால் ஆலோசனையில் இந்திய அணிகள் கோப்பை வென்று சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us