தங்கம் வென்றார் ஈஷா * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
தங்கம் வென்றார் ஈஷா * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
ADDED : மே 27, 2026 11:14 PM

முனிச்: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார் இந்தியாவின் ஈஷா சிங்.
ஜெர்மனியில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் (ரைபிள்/பிஸ்டல்) நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், 587 புள்ளி எடுத்து, 5வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகள் மனு பாகர் (582) 12, ராஹி சர்னோபட் (581), 14வது இடம் பிடித்து வெளியேறினர்.
அடுத்து நடந்த பைனலில் ஈஷா சிங், 50 வாய்ப்பில் 43 முறை இலக்குகளை துல்லியமாக தாக்கி, புதிய உலக சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். முன்னதாக தென் கொரியாவின் கிம் எஜி (42) முதலிடத்தில் இருந்தார்.
ஜெர்மனியின் டொரீன் (38), பல்கேரியாவின் மிரோஸ்லோவா (31) அடுத்த இரு இடம் பெற்றனர். இந்தியா இதுவரை ஒரு தங்கம் வென்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல் இரு இடத்தில் தென் கொரியா (1 தங்கம், 1 வெள்ளி), சீனா (1 தங்கம்) உள்ளன
