/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆனந்த்குமார் புதிய சாதனை * உலக 'ஸ்பீடு ஸ்கேட்டிங்கில்' தங்கம் வென்றார்
/
ஆனந்த்குமார் புதிய சாதனை * உலக 'ஸ்பீடு ஸ்கேட்டிங்கில்' தங்கம் வென்றார்
ஆனந்த்குமார் புதிய சாதனை * உலக 'ஸ்பீடு ஸ்கேட்டிங்கில்' தங்கம் வென்றார்
ஆனந்த்குமார் புதிய சாதனை * உலக 'ஸ்பீடு ஸ்கேட்டிங்கில்' தங்கம் வென்றார்
ADDED : செப் 15, 2025 11:21 PM

பெய்தய்ஹே: உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் ஆனந்த்குமார்.
சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடக்கிறது. சீனியர் ஆண்களுக்கான 500 மீ., ஸ்பிரின்ட் பிரிவு போட்டிகள் நடந்தன. இந்தியா சார்பில் ஆனந்த்குமார் வேல்குமார், ஆர்யன்பால் பங்கேற்றனர். ஆர்யன்பால் 39 வது இடம் பிடித்து வெளியேறினார்.
தமிழத்தை சேர்ந்த ஆனந்த்குமார், ஸ்பெயினின் ஜோயன், கொலம்பியாவின் ஜான் டஸ்கான், இத்தாலியின் டுக்சியோ என நான்கு வீரர்கள் பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் ஆனந்த்குமார், துவக்கத்தில் கடைசி இடத்தில் வந்தார். பின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். கடைசியில், 43.072 வினாடியில் வந்து, 3வது இடம் பெற்ற ஆனந்த் குமார், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
முதல் தங்கம்
அடுத்து ஆண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவு பைனல் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த்குமார், ஒரு நிமிடம், 24.924 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இத்தாலியின் டுக்சியோ (1.25.145), பராகுவேயின் ஜூலியோ மிரெனா (1.25.466) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
இதையடுத்து உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனியர் அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஆனந்த்குமார். முன்னதாக ஜூனியர் அரங்கிலும் இவர், முதல் பதக்கம் (2021ல் வெள்ளி) வென்று சாதித்துள்ளார்.
ஜூனியர் 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் கிரிஷ் ஷர்மா, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஜூனியர் அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் கிரிஷ்.