/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: வைஷாலி மீண்டும் சாம்பியன் * 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி
/
செஸ்: வைஷாலி மீண்டும் சாம்பியன் * 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி
செஸ்: வைஷாலி மீண்டும் சாம்பியன் * 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி
செஸ்: வைஷாலி மீண்டும் சாம்பியன் * 'கேண்டிடேட்ஸ்' தொடருக்கு தகுதி
ADDED : செப் 15, 2025 11:22 PM

சமர்கந்த்: கிராண்ட் சுவிஸ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனார். 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.
உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நடந்தது. ஓபன், பெண்கள் என இரு பிரிவில் போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் மொத்தம் 56 பேர் பங்கேற்றனர். 10 சுற்று முடிவில் இந்தியாவின் வைஷாலி, 7.5 புள்ளியுடன் வைஷாலி, முதலிடத்துக்கு முன்னேறி இருந்தார்.
நேற்று கடைசி, 11 வது சுற்று போட்டிகள் நடந்தன. உலகத் தரவரிசையில் 19 வது இடத்திலுள்ள, தமிழகத்தின் வைஷாலி, 'நம்பர்-7' ஆக உள்ள சீனாவின் வலிமையான, முன்னாள் உலக சாம்பியன் ஜோங்இயை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, போட்டியின் 43 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ, அஜர்பெய்ஜானின் உல்விய்யா மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. கேத்தரினா 8.0 புள்ளி பெற்ற போதும், 'டை பிரேக்கர்' புள்ளியில் பின்தங்கியதால், இரண்டாவது இடம் பிடித்தார்.
இரண்டாவது முறை
இதையடுத்து 11 சுற்றில் 8.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்த வைஷாலி, கோப்பை வென்றார். தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023, 2025) கிராண்ட் சுவிஸ் தொடரில் சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 35.25 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
தவிர 'டாப்-2' இடம் பிடித்த வைஷாலி, கேத்தரினா என இருவரும், 2026ல் நடக்கவுள்ள, உலக சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர். மற்ற இந்திய வீராங்கனைகள் ஹரிகா 11 (6.5), வந்திகா 33 வது (5.0) இடம் பிடித்தனர்.
குகேஷ் ஆறுதல்
ஓபன் பிரிவில் ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், பெண்களுக்கான உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா, நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி உட்பட இந்தியாவின் 15 பேர் பங்கேற்றனர். இதன் கடைசி, 11 வது சுற்றில் குகேஷ், உக்ரைனின் ஆன்ரெயை வீழ்த்தினார். பிரக்ஞானந்தா, நிஹால் சரின், திவ்யா உள்ளிட்டோர் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.
11 சுற்று முடிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி (8.0) சாம்பியன் ஆனார். அனிஷ், ஜெர்மனியின் மத்தியாஸ் (7.5) 'டாப்-2' இடம் பெற்று, 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர். அர்ஜுன் 6 (7.0), நிஹால் சரின் 9 (7.0), விதித் குஜ்ராத்தி 15வது (7.0) இடம் பெற்றனர். பிரக்ஞானந்தா 35 (6.0), குகேஷ் 41 (6.0), திவ்யா 82 வது (5.0) இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
மூன்றாவது வீராங்கனை
'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க இதுவரை 7 பேர் (மொத்தம் 8) தகுதி பெற்றுள்ளனர். இதில், உலக கோப்பை தொடரில் 'டாப்-2' இடம் பெற்ற திவ்யா, ஹரிகா, தற்போது வைஷாலி என மூன்று இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றனர்.