/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழ் தலைவாஸ் கேப்டன் எங்கே * புரோ கபடியில் 'சஸ்பென்ஸ்'
/
தமிழ் தலைவாஸ் கேப்டன் எங்கே * புரோ கபடியில் 'சஸ்பென்ஸ்'
தமிழ் தலைவாஸ் கேப்டன் எங்கே * புரோ கபடியில் 'சஸ்பென்ஸ்'
தமிழ் தலைவாஸ் கேப்டன் எங்கே * புரோ கபடியில் 'சஸ்பென்ஸ்'
ADDED : செப் 11, 2025 10:49 PM

ஜெய்ப்பூர்: இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், பெங்கால், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை தமிழ் தலைவாஸ் அணிக்கு புதிய கேப்டனாக 'ஆல்-ரவுண்டர்' பவன் ஷெராவத் 28, நியமிக்கப்பட்டார். ஏலத்தில் ரூ. 59.50 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.
இவரது தலைமையில் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது. அடுத்த இரு போட்டியில் தோற்க, பட்டியலில் 2 புள்ளியுடன் 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதன் இரண்டாவது கட்ட போட்டிகள் இன்று ஜெய்ப்பூரில் துவங்குகின்றன. தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்சை சந்திக்க உள்ளது.
இதனிடையே முதல் 3 போட்டியில் 22 புள்ளி எடுத்த கேப்டன் பவன் ஷெராவத், தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து 'மிஸ்' ஆகியுள்ளார்.
இவருக்கு காயம் ஏற்படாத போதும் விசாகப்பட்டனத்தில் இருந்து, ஜெய்ப்பூர் செல்லவில்லை. சக வீரர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, டில்லியில் உள்ள தனது வீட்டுக்கு பவன் ஷெராவத் சென்றார் என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளார் என்றும் செய்தி வெளியாகின. இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் இவர் பங்கேற்பது சந்தேகம்.
மும்பை 'திரில்' வெற்றி
நேற்று விசாகப்பட்டனத்தில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் மும்பை, பாட்னா அணிகள் மோதின. முதல் பாதியில் மும்பை 23-15 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் பாட்னா 24 புள்ளி எடுத்தது. கடைசி நேரத்தில் அசத்திய மும்பை 40-39 என 'திரில்' வெற்றி பெற்றது.