/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: வைஷாலி, திவ்யா கலக்கல்
/
செஸ்: வைஷாலி, திவ்யா கலக்கல்
ADDED : செப் 11, 2025 11:02 PM

சமர்கந்த்: கிராண்ட் சுவிஸ் தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றார் வைஷாலி.
உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
பெண்கள் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் 7வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் வைஷாலி, சீனாவின் குவோ குயியை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 30 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 7 சுற்று முடிவில் 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் வைஷாலி.
ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பங்கேற்கின்றனர். திவ்யா, செர்பிய வீரர் வெளிமிர் இவிச்சை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 49 வது நகர்த்தலில் வென்றார். மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் மேக்சிமை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால் சரின், ஈரானின் பர்ஹாமை சாய்த்தார்.
7 சுற்று முடிவில் ஜெர்மனியின் மத்தியாஸ் (5.5), நிஹால் சரின் (5.5) முதல் இரு இடத்தில் உள்ளனர்.