/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஜோனாதன்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் ஜோனாதன்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் ஜோனாதன்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் ஜோனாதன்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : செப் 26, 2025 10:43 PM

புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜோனாதன் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றார்.
டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்' / 'ஷாட்கன்') தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோனாதன் கவின் ஆண்டனி (586.19 புள்ளி), சிராக் சர்மா (578.15) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இதில் அசத்திய ஜோனாதன், 244.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி (576.19 புள்ளி), மோஹினி சிங் (576.12), ராஷ்மிகா சாகல் (573.17) முறையே 1, 2, 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய ராஷ்மிகா, 236.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். ரஷ்யாவின் எவெலினா ஷீனா (240.9) தங்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான வன்ஷிகா (174.2), மோஹினி (153.7) முறையே 5, 6வது இடம் பிடித்தனர்.
இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, முதலிடத்தில் நீடிக்கிறது.