ADDED : செப் 03, 2025 10:55 PM

புதுடில்லி: ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப், ரேபிட் பிரிவில் இந்தியாவின் பிரிஸ்டி சாம்பியன் ஆனார்.
ஹாங்காங்கில் ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியா சார்பில் பிரிஸ்டி முகர்ஜீ, பிரதிக்சா, தியா, தீபிஹா உட்பட மொத்தம் 58 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற 8 சுற்றிலும் பிரிஸ்டி வெற்றி பெற்று 8.0 புள்ளி பெற்றார். இதையடுத்து ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் 1.5 புள்ளி வித்தியாசத்தில் முந்திய பிரிஸ்டி, முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். செக் குடியரசின் டோராய் (6.5), மங்கோலியாவின் குஸ்லென்ஜயா (6.5) அடுத்த இரு இடம் பெற்றனர்.
அடுத்து நடந்த கிளாசிக்கல் பிரிவில், கிரிஸ்டி 5.5 புள்ளியுடன் (5 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான மற்றொரு கிளாசிக்கல் பிரிவில் இந்தியாவின் தியா சவுத்ரி பங்கேற்றார். 9 சுற்றில் 5 வெற்றி, 2 'டிரா' செய்த (2 தோல்வி) இவர், மொத்தம் 6.0 புள்ளி எடுத்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.