/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய கூடைப்பந்து: இந்தியா சாம்பியன் * ஈரானுடன் 'திரில்' வெற்றி
/
ஆசிய கூடைப்பந்து: இந்தியா சாம்பியன் * ஈரானுடன் 'திரில்' வெற்றி
ஆசிய கூடைப்பந்து: இந்தியா சாம்பியன் * ஈரானுடன் 'திரில்' வெற்றி
ஆசிய கூடைப்பந்து: இந்தியா சாம்பியன் * ஈரானுடன் 'திரில்' வெற்றி
ADDED : செப் 19, 2025 11:24 PM

செரெம்பன்: ஆசிய கோப்பை கூடைப்பந்து (16 வயது) தொடரில் 'திரில்' வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது.
மலேசியாவின் செரெம்பன் நகரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கூடைப்பந்து ('டிவிசன் பி') தொடர் நடந்தது. இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ்பெகிஸ்தான், சமோவா அணிகளுடன் இடம் பெற்றது.
லீக் சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தோனேஷியாவை 65-63 என வீழ்த்தியது.
நேற்று நடந்த பைனலில் வலிமையான ஈரானை மீண்டும் எதிர்கொண்டது. ஏற்கனவே லீக் சுற்றில் ஈரானை வென்றதால் இந்திய வீராங்கனைகள் நம்பிக்கையுடன் செயல்பட்டனர்.
முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 32-32 என சம நிலையில் இருந்தன. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீராங்கனைகள் அடுத்தது புள்ளிகள் பெற, ஒரு கட்டத்தில் இந்தியா 52-42 என முந்தியது.
பின் ஈரான் அணியினர் எழுச்சி பெற, இந்தியா 61-62 என பின் தங்கியது. கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்த இந்தியா, 67-66 என்ற கணக்கில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. ஆசிய கூடைப்பந்து 'டிவிசன் ஏ' பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றது.