/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கருணுக்கு இடம் கிடைக்குமா: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எதிர்பார்ப்பு
/
கருணுக்கு இடம் கிடைக்குமா: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எதிர்பார்ப்பு
கருணுக்கு இடம் கிடைக்குமா: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எதிர்பார்ப்பு
கருணுக்கு இடம் கிடைக்குமா: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எதிர்பார்ப்பு
ADDED : செப் 22, 2025 10:56 PM

துபாய்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கருண் நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, வரும் அக். 2ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், அக். 10-14ல் டில்லியில் நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான தேர்வுக்குழு கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியாளர் காம்பிர், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ஆசிய கோப்பை தொடருக்காக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பதால், அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் 'ஆன்-லைன்' வழியாக நடக்க உள்ளது.
ஜுரெல் வாய்ப்பு: 'லெவன்' அணியில் கேப்டன் சுப்மன், ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன், தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வர். ரிஷாப் பன்ட் முழு உடற்தகுதி பெறாத நிலையில் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்படுவார். சொந்த மண்ணில் இந்திய அணி கூடுதல் பேட்டருடன் களமிறங்க விரும்பினால் கருண் நாயர், 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவலாம். இதில் கருண் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 4 போட்டியில், ஒரு அரைசதம் உட்பட 205 ரன் எடுத்தார்.
பும்ராவுக்கு ஓய்வு: முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம். இவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வாகலாம். ஒருவேளை இந்திய அணி 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க விரும்பினால் ஜடேஜா, குல்தீப், வாஷிங்டன் சுந்தருடன், அக்சர் படேல் இடம் பெறலாம். வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் மட்டும் தேர்வாகலாம்.
'ரிசர்வ்' வீரராக நாராயணன் ஜெகதீசன் தேர்வு செய்யப்படலாம். இவரை 2வது விக்கெட் கீப்பர் அல்லது 3வது துவக்க வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்திய உத்தேச அணி
சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன், கருண்/படிக்கல், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், நாராயணன் ஜெகதீசன், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப்.