/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
உலக கோப்பை வெல்வோம்: ஸ்னே ராணா நம்பிக்கை
/
உலக கோப்பை வெல்வோம்: ஸ்னே ராணா நம்பிக்கை
ADDED : செப் 22, 2025 10:47 PM

மும்பை: ''சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையை வெல்வோம்,'' என இந்திய வீராங்கனை ஸ்னே ராணா தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்), 13வது சீசன் இந்தியா, இலங்கையில் (செப். 30 - நவ. 2) நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. கவுகாத்தியில் நடக்கும் முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய பெண்கள் அணி, இதுவரை உலக கோப்பை வென்றதில்லை.
ஸ்னே ராணா கூறுகையில்,''இத்தொடர் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இம்முறை கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு. பிரிமியர் லீக் தொடரில் சர்வதேச முன்னணி வீராங்கனைளுடன் இணைந்து விளையாடியது பல அனுபவங்களை கற்று தந்தது,''என்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனை தீப்தி சர்மா கூறுகையில்,'' இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அமொல் முஜும்தருக்கு முதல் உலக கோப்பை என்பதால் சிறப்பு வாய்ந்தது. சொந்த ரசிகர்கள் முன் விளையாடுவது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,''என்றார்.